--- --:--:-- --

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு..!

7

ராணிப்பேட்டை மாவட்டம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பசு மாடு பத்திரமாக மீட்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தனியார் நபருக்கு சொந்தமான காலி இடத்தில் சுமார் 6 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக பசுமாடு ஒன்று விழுந்தது.

 

வெளியே வர முடியாமல் தண்ணீர் தொட்டிக்குள் பசுமாடு தவிப்பதை கண்டார். அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஜேசிபி வாகன இயந்திரம் உதவியுடன் பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.

 

Right Menu Icon