--- --:--:-- --

ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்..முக்கிய முடிவு..!

1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

 

இதில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் புதிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. மேலும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பதில் திட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon