சாலையில் திடீரென ஓடிய குழந்தை..வேகமாக வந்த லோடு ஆட்டோ..!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே தாயுடன் சென்று கொண்டிருந்த குழந்தை சாலை விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த குழந்தை விளையாடிக்கொண்டே திடீரென சாலையின் நடுப்பகுதியை நோக்கி ஓடுகிறது. அப்போது வேகமாக வந்த லோடு ஆட்டோ ஓட்டுனர் விழிப்போடு விலகிச் சென்றதால் குழந்தை விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





