--- --:--:-- --

மனைவி போனை பார்த்த கணவருக்கு அதிர்ச்சி..!

1

முகநூலில் பழகி திருமணம் செய்து தன்னிடம் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 37 சவர நகைகளை பெற்று மோசடி செய்ததாக ராமநாதபுரத்தில் மனைவியின் மீது வனச்சரகர் புகார் அளித்துள்ளார்.

 

கீழக்கரையில் வனச்சரகராக பணிபுரிந்து வரும் முத்துராமன் என்பவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நசீமா பர்வீன் என்ற பெண்ணுடன் முகநூல் மூலம் பழகி வந்தார். இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் நசீமாவிற்காக லட்ச கணக்கில் நகை, கார் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

 

செல்போனில் ஆய்வு செய்த பொழுது அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதும் பலரை ஏமாற்றியிருப்பதம் தெரிய வந்ததாக கூறி, புகார் அளித்ததன் பேரில் அந்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon