--- --:--:-- --

டிஸ்சார்ஜ் ஆனார் நிர்மலா சீதாராமன்..! பிப்.1ம் தேதி பட்ஜெட் தாக்கல்..!

7

த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மதியம் திடீரென டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு வயிற்று பிரச்சனை, காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாக தெரிகிறது. மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் தற்போது அவர் குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நிர்மலா சீதாராமன் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்கு மும்முறமாக ஈடுபட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

Right Menu Icon