ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை தயார் நிலை..!
கொரோனா முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கையாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அழைத்து வருவது அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, அவர்களை எவ்வாறு தனிமைப்படுத்துவது என்பது போன்ற நிகழ்வுகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதா, தேவையான ஆக்ஸிஜன் தயார் நிலையில் உள்ளதா என ஆட்சியர் ஆய்வு செய்தார்.





