தரக்குறைவாக திட்டியதால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை..!
சென்னை மாங்காட்டில் அரசு பள்ளி வேளாண்மை குழு தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சௌபாக்கியம் என்பவர் பள்ளி மேலாண்மை தலைமை குழு தலைவியை தரக்குறைவாக பேசி திட்டியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்ககோரி மாங்காடு காவல் நிலையத்திலும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்துவிட்டு பியூலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் பியூலா குறித்து ஆசிரியை சௌபாக்கியம் சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ பதிவிட்டு தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





