--- --:--:-- --

பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

6

டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக்கூடிய வழக்கில் தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் மற்றும் கோபிநாத் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் டாஸ்மாக் கடை மூடும் நேரத்தில் மது வாங்குபவர்கள் பொது இடத்தில் குடித்துவிட்டு கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை வீசி செல்வதாக குறிப்பிட்டு இருந்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகமும் பதில் தர உத்தரவிட்டுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon