--- --:--:-- --

நள்ளிரவில் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்..!

4

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது தரப்பை சேர்ந்த கட்சி ஆலோசகர் ராமச்சந்திரனுடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.

 

அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். இதற்கிடையே பன்னீர்செல்வம் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வந்தார்.

 

விரைவில் பொதுக்குழு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் இல்லத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.

 

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon