--- --:--:-- --

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிப்பு..!

3

ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியை பிடித்த நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடைவிதித்து அந்நாட்டு உயர்கல்வித்துறை அமைச்சகம் முத்தரவிட்டுள்ளது.

 

ஏற்கனவே பள்ளிகள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை, ஹிஜாப் அணியாமல் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை தெளிவாக அரசு விதித்த நிலையில் தற்போது பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதித்துள்ளது.

 

மறு அறிவிப்பும் வரும் வரை இதை கடைபிடிக்க வேண்டும் எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாலிபான் அரசின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon