குளிர்கால கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிப்பதற்கு ஆலோசனை..!
குளிர்கால கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிப்பதற்கு மக்களவை சபாநாயகர் மாநிலங்களவை தலைவர் ஆகியோர் ஆலோசனை நடத்தினார். இந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்பாக கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் வரும் வெள்ளிக்கிழமை அன்று கூட்டத்தொடரை முடிப்பதற்கு ஓம் பிரலாம் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பான அறிவிப்பில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





