வரும் ஏப்ரல் முதல் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்..!
ராஜஸ்தானில் அடுத்தாண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் கலந்துகொண்ட மாநில முதலமைச்சர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை பாதிக்கும் குறைவான விலையில் தனது அரசு வழங்கும் என்று குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஏழ்மை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் தலா 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உடல்நிலையில் மாநில முதலமைச்சரின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





