--- --:--:-- --

மொபைல் சார்ஜர் வெடித்து சிதைந்து வீடு..!

4

கேரளாவில் மொபைல் சார்ஜர் வெடித்ததில் வீடு முழுவதும் தீ பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் மசூத் என்பவரின் வீட்டில் திடீரென தீ பற்றி அதிகப்படியான புகை வெளியேறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் செல்போன் சார்ஜ் செய்த பிறகு விளக்கை அணைக்காமல் விட்டதால் வெப்பத்தின் காரணமாக சார்ஜர் வெடித்து வீடு முழுவதும் தீ பரவியது தெரிய வந்திருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon