இன்று அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்..!
திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று சேப்பாக்கம், திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக நியமனம் செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் உள்ள ஹாலில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும்.
பதவி ஏற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். ஆளுநர் ஆர் .என் .ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். விழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என மொத்தம் 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் அவர் வாழ்த்து பெற உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் ஏற்ற பிறகு அண்ணா கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.
அமைச்சராக பதவியேற்கும் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் உள்ள இரண்டாவது தளத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. புதிய மேஜை, பிரம்மாண்ட வரவேற்பறை என இரண்டு நாட்களில் இந்த அறை தயாராகியுள்ளது.





