மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் சரத்குமார்..!
நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 130க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.
தற்பொழுது முழு நேர அரசியல்வாதியாக உள்ள இவர் நடிகை ராதிகாவை கடந்த 2001 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் சரத்குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக சரத்குமார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார்.
பரிசோதனை நிறைவு செய்து தற்பொழுது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டிருக்கிறார். யாரும் எந்த ஒரு வதந்தியும் நம்ப வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.






