கலெக்டர் அலுவலகம் முன்பு அரளி விதையை குடித்த பெண்..!
கணவர் இல்லாத நேரத்தில் தன்னிடம் தவறாக பேசும் பக்கத்து வீட்டு இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த இளம் பெண் அரளி விதையை சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்மனி என்ற பெண் நெப்போலியன் என்பவர் கஞ்சா மற்றும் மது போதையில் தன்னிடம் தவறாக பேசுவதாக தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் மூன்று முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மனுவை கொடுக்க வந்து அரளி விதையை சாப்பிட்டதால் வாந்தி எடுத்து மயங்கும் நிலைக்கு சென்றதை எடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






