--- --:--:-- --

சிவாவை சஸ்பெண்ட் செய்ததன் பின்னணி என்ன..?

5

பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சூர்யா சிவா ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக பெண் நிர்வாகியை சூர்யா சிவா அவதூராக பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

 

இது தொடர்பாக திருப்பூரில் விசாரணை நடத்திய தமிழக பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு சூர்யா சிவாவும் பாஜக பெண் நிர்வாகி ஆஜராகினர். நடந்தவற்றை மறந்து விட்டு சுமூகமாக கட்சி பணிகளை தொடர விரும்புவதாக இருவரும் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, பெண்களை தெய்வமாக போற்றும் கட்சி பாஜக என்றும் பெண்களை இழிவு படுத்துவதை பாஜக ஒருபோதும் ஏற்காது என்றும் கூறியுள்ளார்.

 

சுமூகமாக செல்வதாக இருவரும் கூறினாலும் கட்சியின் மாநில தலைவராக அதனை ஏற்க தான் தயாராக இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

எனவே கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை சூர்யா ஒப்புக்கொண்டதையடுத்து அவரை ஆறு மாதத்திற்கு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடை நீக்கம் செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

 

Right Menu Icon