வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இளைஞர் செல்லும் வழியில் உயிரிழப்பு..!
கடலூரில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் உயிரிழந்ததாக பரவிய வதந்தியால் பதற்றம் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இளைஞர் மூக்கில் வளர்ந்த சதையை அகற்றுவதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சுயநினைவு இழந்ததால் மற்றொரு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
ஆனால் போகும் வழியிலேயே உயிரிழந்ததால் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதனால் மருத்துவமனை முன் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.





