மெட்ராஸ் ஐ இருந்தால் நாளைக்கு பள்ளி செல்ல வேண்டாம்..!
மெட்ராஸ் ஐ எனப்படும் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும் எனக் கூறியுள்ளார்.
எனவே குடும்பத்தில் உள்ளவர்கள் யாருக்கேனும் கண் நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என கூறப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ பாதிப்புக்குள்ளானவர்கள் நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





