குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய டிசைன் வேட்டி சேலை..!
பொங்கல் பண்டிகையை ஒட்டி 2023 ஆம் ஆண்டு ஜனவரி பத்தாம் தேதிக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பண்டிகையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சரின் ஸ்டாலினிடம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான பேட்டி சேலை உற்பத்திக்கான முதல் தவணையாக 243 கோடியே 96 லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது. 2023 ஜனவரி 10ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பத்து ஆண்டுகளுக்கு பிறகு புதிய டிசைனில் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





