--- --:--:-- --

உறங்கிக் கொண்டிருந்த பொழுது இடிந்து விழுந்த வீடு..!

7

துரை அருகே ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். மதுரை மாவட்டத்தில் வடக்கு நாகினி பட்டியை சேர்ந்தவர் பாண்டி – முத்துப்பிள்ளை தம்பதியினர். இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர்.

 

இந்நிலையில் தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் மனைவி மகள் மற்றும் மகன் பேரனுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென்று வீடு இடிந்து விழுந்தது. இதில் ஐந்து பேரும் சிக்கி காயமடைந்தனர்.

 

இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீடு இடிந்த நிலையில் தங்க இடமின்றி தவித்து வருவதால் அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

Right Menu Icon