கருப்பு உருவம் பின் தொடர்வதாக கூறி மாணவி தற்கொலை முயற்சி..!
தூத்துக்குடியில் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி நூதனமான வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில் உண்மையான காரணம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவி பள்ளியின் முதல் மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. அவரை மீட்டு ஆசிரியர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காவலர்களின் விசாரணையில் மாணவி திடுக்கிடும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். தன்னை ஒரு கருப்பு உருவம் பின் தொடர்ந்து வருவதாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தை கேட்டு காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த கருப்பு உருவமே தன்னை மாடிக்கு அழைத்துச் சென்று குதித்து விளையாடலாம் என்று கூறியதாகவும் இதனால் மாடியில் இருந்து குதித்ததாகவும் மாணவி தெரிவித்தார். இது தொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





