குஷ்புவிற்கு நாவடக்கம் தேவை எனக் கூறிய திமுக..!
நடிகை குஷ்புவிற்கு நாவடக்கம் தேவை என திமுக விமர்சித்துள்ளது. இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையில் பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தை பற்றி பேசாமல் தனது வாய் துணிக்கை காண்பித்துள்ளதாக விமர்சித்துள்ளது.
சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போதெல்லாம் எரியாத வயிறு பால்விலை உயர்வை கண்டு மட்டும் எரிகிறதா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தும் குஷ்பூ எச் ராஜா பேசியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவாரா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





