காதலுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டு காண்பித்து கணவனை கொன்ற மனைவி..!
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கணவரின் கண்களை கட்டிவிட்டு கொலை செய்த மனைவிக்கும் அவரது காதலனுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்லாவரத்தை சேர்ந்த கதிரவனுக்கும் வினோதினிக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
அக்டோபர் 15ஆம் தேதி கணவருடன் திருவான்மையூரில் சென்றுள்ளார். கதிரவனின் கண்களை கட்டி விட்டு கண்ணாம்பூச்சி விளையாடியுள்ளனர். அப்பொழுது கதிரவனின் தலையில் சுத்தியலால் அடித்து விட்டு ஒருவர் தப்பி ஓடினார். இதில் கதிரவன் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
அதில் வினோதினியின் காதலனுடன் இணைந்து கொலையை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் வினோதினிக்கும் அவரது காதலனுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





