காற்றழுத்த தாழ்வு பகுதியால் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு..!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெற கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை வலுப்பெறக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் மேற்கு வட மேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





