--- --:--:-- --

காதலியின் பாய் பெஸ்டி மீது தீப்பற்ற வைத்த காதலன்.!

9

சென்னையில் தான் காதலித்த பெண் வேறொரு நபருடன் நெருங்கி பழகியதால் அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வியாசர் பாடியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் புளியந்தோப்பில் உள்ள ஆடுகளை பராமரிக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

 

இவர் தன் வேலையை முடித்துவிட்டு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மினி வேன் ஒன்றில் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது வந்த மர்ம நபர் ஒருவர் அவர் மீது தீயை பற்ற வைத்துவிட்டு தப்பி சென்று விட்டார். தீக்காயம் அடைந்த ராஜேஷ் அருகில் இருந்த உரிமையாளரை எழுப்பி தன்னை காப்பாற்ற சொல்லி கேட்டுள்ளார்.

 

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராஜேஷ் அனுமதிக்கப்பட்டார். புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவியை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வியாசர்பாடியை சேர்ந்த பஷீர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பஷீர் அதே பகுதியை சேர்ந்த ஹாஜிரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அந்த பெண்ணின் பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்க கேட்ட பொழுது அவர்கள் மறுத்திருக்கிறனர்.

 

இந்த நிலையில் ராஜேஸ் என்பவருடன் ஹாஜிரா நெருங்கி பழகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை தீ வைத்து கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon