--- --:--:-- --

மூன்றாவது மனைவியை விட்டுவிட்டு 17 வயது சிறுமியுடன் ஓட்டம்..!

8

அருப்புக்கோட்டையில் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்த நபர் ஒருவர் நாளாவதாக 17 வயது சிறுமியை திருமணம் செய்ததால் போக்சோ வழக்கின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் புதுகுளத்தை சேர்ந்த சதீஷ்.

 

இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி தற்பொழுது மூன்றாவதாக லட்சுமி என்பவரை திருமணம் செய்து அருப்புக்கோட்டையில் வாழ்ந்து வந்துள்ளார். சதீஷ்குமார் அவரது வீட்டின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

 

அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்து உள்ளது. இதனையடுத்து சதீஷ் அந்த சிறுமியை திருமணம் செய்ய அழைத்துக் கொண்டு வெளியூருக்கு சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தன் மகளை மீட்டு தரக்கோரி சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்திருந்தார்.

 

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தன் சகோதரியின் வீட்டில் மகள் இருப்பதை அறிந்த சிறுமியை தந்தை விரைந்து சென்று மகளை மீட்டார். இதனிடையே தலைமறைவான சதீஷை கண்டுபிடித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon