சவுக்கு சங்கருக்கு நவம்பர் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!
சவுக்கு சங்கருக்கு நவம்பர் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனினும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளுக்காக அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கடலூரிலிருந்து அழைத்துவரப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





