--- --:--:-- --

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் இன்று விடுதலை..!

1

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிறைத்துறை தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 18ஆம் தேதி ஆயுள் தண்டனை கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

 

தற்பொழுது அதே அதிகாரத்தை கொண்டு நளினி உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் தீர்ப்பு ஈமெயில் மூலமாக சம்பந்தப்பட்ட சிறைச்சாலைகளுக்கு வந்தவுடன் உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி அவர்கள் ஆறு பேரும் இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon