இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்து..!
நெல்லை மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தின் மீது அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கன்னங்குளம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளான முருகன், நாகவலை ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மன்னார்புரம் அருகே பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையை கடந்துள்ளனர்.
அப்பொழுது பின்னல் வந்து கொண்டிருந்த நாகர்கோயிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று அரசு பேருந்து அவர்களின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகவலை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





