20 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 17 வயது சிறுவன்..!
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் 20 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த சிறுவனை கத்தியால் குத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். புது வண்ணாரப் பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் யுவராஜ் ஆகியோர் கூடுவாஞ்சேரியில் அறை எடுத்து தங்கி வயர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
அப்பொழுது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த பவானி என்ற பெண்ணை இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுவன் பவானியை அந்த பகுதியில் உள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் சந்துரு வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த சந்துரு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜ் உட்பட 3 பேரை கைது செய்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




