பொதுமக்களை தாக்கிய கரடி திடீரென உயிரிழப்பு..!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொதுமக்களை தாக்கியதாக பிடிக்கப்பட்ட கரடி திடீரென உயிரிழந்துள்ளது. கடையம் அருகே சில தினங்களுக்கு முன் கரடி தாக்கியதில் பொதுமக்கள் மூவர் படுகாயம் அடைந்தனர். கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அது உயிரிழந்துள்ளது. கரடி இறந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






