நாடு தன்னிறைவு பெறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை..!
நாடு தன்னிறைவு பெறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்று பிரதமர் மோடி விவரித்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் இந்த முறை மக்கள் அளிக்கும் வாக்கு அடுத்த 25 நாட்களுக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி பயணத்தை தீர்மானிக்கும் என கூறினார்.
இங்குள்ள மக்கள் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது என்று கூறிய பிரதமர் ஹிமாச்சலில் பாரதிய ஜனதா அரசு இருந்த பொழுது பணிகள் வேகமாக நடந்தது என்றும் ஆனால் காங்கிரஸ் ஆட்சி திரும்பிய பிறகு அனைத்து பணிகளும் முடங்கி விட்டது எனவும் தெரிவித்தார்.





