பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பே விஜய் படத்தில் நடித்திருக்கும் பாக்யா..!
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது அந்த தொடருக்கு நல்ல ரேட்டிங் கிடைத்து வருகிறது. இதில் பாக்யாவாக நடித்து வரும் சுசித்ராவுக்கு அதிகம் ரசிகர்களும் கிடைத்து இருக்கிறார்கள்.
கன்னட நடிகையான அவர் தற்போது தமிழில் ஒரே சீரியலில் இந்த அளவுக்கு பாப்புலர் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.சுசித்ரா என்னதான் தற்போது சின்னத்திரையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தாலும், அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்தது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய திரைப்படத்தில் நடிக்க தான். அவர் இயக்குனர் விஜய்யின் சைவம் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




