--- --:--:-- --

எழுத்துப் பிழையோடு சசிதரூர் பதிவிட்ட ட்வீட் வைரல்..!

5

ஆங்கிலத்தில் அதிகம் புலமை பெற்றவராக அறியப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் புதிய மற்றும் புரியாத வார்த்தைகளை பேசி மக்களை அசர வைப்பது வழக்கம். அதனால்தான் அவர் உண்மையிலேயே எழுத்துப் பிழை செய்தாலும் கூட அது ஒரு புதிய வார்த்தை என்று அனைவரும் நினைக்க தோன்றியது.

 

அண்மையில் இந்தியா பாகிஸ்தானுடன் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் விராட்டின் ஆட்டத்தை பாராட்டும் அவசரத்தில் ஆன்த்டிக் என்ற வார்த்தைக்கு பதிலாக ஆர்த்டிக் என பதிவிட்டிருந்தார்.

 

பெண் இதை சுட்டிக் காட்ட தவறுதலாக பதிவிட்டு விட்டேன், தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி என்று சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். எப்படிப்பட்டவர்களும் தவறு செய்யக் கூடும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon