காதலியின் தந்தையை அடித்து ரகளையில் ஈடுபட்டவர் கைது..!
சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டையில் நள்ளிரவில் காதலியின் தந்தையை அடித்து காலை உடைத்த ரகளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டான். ரஞ்சித் என்பவர் கல்லூரி மாணவி 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களாக ரஞ்சித்தை பார்ப்பதை தவிர்த்து வந்த நிலையில் நேற்று இரவு காலனியில் உள்ள காதலியின் வீட்டிற்கு ரஞ்சித் வந்துள்ளார். மகளை பார்த்து பேச சீனிவாசன் அனுமதி மறுத்த நிலையில் ரஞ்சித் அவரை தாக்கியுள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ரஞ்சித்தை விரட்டி அடிக்க முயற்சி செய்தபோது மாடி அறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் ரஞ்சித்திடம் சமாதானமாக பேசி காவல்நிலையம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





