--- --:--:-- --

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய வாட்ஸ்அப் சேவை..!

2

பல்வேறு நாடுகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியிருந்த வாட்ஸ்அப் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் சேவை இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணி முதல் சில மணி நேரம் முடங்கியது.

 

இதனால் அதன் பயனாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். வாட்ஸ்-அப் செயலியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியிருந்த வாட்ஸ்அப் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon