அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பி மற்றும் சி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் ஆக 6,908 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
மேலும் தற்காலிக ஊழியர்களுக்கு 1,184 ரூபாய் வழங்கப்படும் என நிதித்துறை சார்பு செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.





