அரசு பேருந்தின் இருக்கைகள் விழுந்ததில் பயணி வெளியே விழுந்து காயம்..!
கன்னியாகுமரியில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் இருக்கைகள் விழுந்ததில் அதில் அமர்ந்து இருந்த பயணி பேருந்தில் இருந்து வெளியே விழுந்து காயமடைந்தார்.
அரசு பேருந்தில் பெரும்பாலானவை பழுதடைந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக கேரள எல்லை பகுதிக்கு சென்ற பேருந்தில் தஞ்சாவூரை சேர்ந்த செல்வராஜ் கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிக உள்ளூர் பேருந்துகளும் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




