பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு..!
பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அந்த அறிவிப்பில் தற்பொழுது வெளியிட்டுள்ளது.





