ப்ளூடூத் மூலம் தேர்வெழுதி காப்பி அடித்த 28 பேர் கைது..!
ஆர்மி தெருவில் ப்ளூடூத் மூலம் தேர்வெழுதி காப்பி அடித்த இருபத்தி எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருபத்தி எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இவர்களால் மீண்டும் ஆர்மி தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆர்மி தேர்வு நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில் ஹரியானாவை சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புளூடூத்தை வைத்து தேர்வில் காப்பியடித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். இதனை கண்டுபிடித்த தேர்வறை கண்காணிப்பாளர் ப்ளூடூத் சாதனத்தை கைப்பற்றி இருபத்தி எட்டு பேரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.





