தனியார் உணவகத்தில் லிப்ட்டில் சிக்கிய 7 பேர் பத்திரமாக மீட்பு..!
சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த தனியார் உணவகத்தில் லிப்ட்டில் சிக்கிய 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.தனியாக உணவகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் உணவருந்த சென்றுள்ளனர்.
லிப்டில் சென்ற அவர்கள் உள்ளே கதவை மூடியதும் லிப்ட் இயங்கவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே இருந்த 3 ஆண்கள் 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையை மீட்டனர்.





