திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு..!
திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் . வேறு யாரும் போட்டியிடாததால் திமுக தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
மாநாடு போன்ற பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் , சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திமுக பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியது . கூட்டத்தில் திமுக தலைவர் , பொதுச் செயலாளர் , பொருளாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது .
பொதுக்குழுவில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்று உள்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார் .
அதேபோன்று , பொதுச் செயலாளராக அமைச்சர் துரைமுருகன் , பொருளாளராக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .





