ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகை..!
பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். முதல் ஷோவில் இருந்து சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வரும் இப்படம் வசூலில் சக்கப்போடு போட்டு வருகிறது.
இப்படத்தில் மிகமுக்கியமான ஒரு கதாபாத்திரம் தான் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி. இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் மணி ரத்னம் தேர்ந்தெடுத்தது நடிகை அனுஷ்கா தானாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




