--- --:--:-- --

15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

2

மிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய விதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon