ஆன்லைன் ரம்மியால் பணத்தை பணத்தை இழந்த மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்து பணத்தை இழந்து வந்த பொறியியல் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்தார். சந்தோஷ் பெற்றோர் எதிர்ப்பை மீறி இரண்டு கிராம் மோதிரம் மற்றும் பணத்தை எடுத்து சென்றதாக தெரிகிறது.
தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த சந்தோஷ் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். பின்னர் மணப்பாறை கீரை தோட்டம் என்ற இடத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே காவலர்கள் சந்தோஷின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





