--- --:--:-- --

108 ஆம்புலன்சை அடித்து நொறுக்கிய நபர்..!

4

புதுக்கோட்டையில் காயமடைந்தவரை காப்பாற்ற சென்ற 108 ஆம்புலன்சை அடித்து நொறுக்கிய நபர் போலீசாரையும் தாக்க முயற்சித்து தப்பியோடினார். கணேசன் என்பவருக்கும் அவரது உறவினரான சுரேஷ் என்பவருக்கும் பல ஆண்டுகளாக குடும்ப தகராறு உள்ளதாக கூறப்படுகிறது.

 

ஞாயிற்று கிழமை அன்று கணேசன் வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த முருகேசனின் மகன் பிரேம்குமார் உருட்டுக்கட்டையால் அவரையும் வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் காயம் அடைந்தவர்களை அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்துள்ளது.

 

அதில் கணேசனை ஏற்ற முயன்றபோது அங்கு வந்த பிரேம்குமார் ஆம்புலன்சையும், மற்றவர்களையும் தாக்கியுள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரையும் பிரேம்குமார் தாக்க முயற்சி செய்து தப்பி ஓடிய நிலையில் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon