குஜராத்தில் நடைபெறும் மாநாட்டை காணொளி மூலம் தொடக்கி வைத்த பிரதமர்..!
அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குஜராத்தில் நடைபெறும் 2 நாள் மாநாட்டை காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
பிளாஸ்டிக் கழிவுகளை சமாளித்து வனவிலங்குகள் மற்றும் வன மேலாண்மை தொடர்பான விஷயங்களில் சிறப்பான பங்களிப்பை மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு உருவாக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





