இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியை பயன்படுத்தி சுத்தம் செய்தவர்..!
டெல்லியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியை பயன்படுத்தி சுத்தம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். டெல்லி சக்கர வாகனத்தில் தேசியக் கொடியை பயன்படுத்தி சுத்தம் செய்ததாக நபர் ஒருவர் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தேசிய மரியாதை மதிப்பு தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
மேலும் அவரது இரு சக்கர வாகனம் மற்றும் கொடியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த நபர் டெல்லியின் பகுதியில் வசித்து வருபவர் என தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் தேசியக்கொடியை வைத்து சுத்தம் செய்வதை இந்த பகுதியில் உள்ள ஒருவர் மாடியில் இருந்து வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





