--- --:--:-- --

கூட்டுறவு துறை அமைச்சர்களின் மாநாடு இன்று தொடங்குகிறது..!

1

அனைத்து மாநில கூட்டுறவு துறை அமைச்சர்களின் மாநாடு மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று தொடங்குகிறது. கூட்டுறவுத் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

இதற்காக கடந்த ஆண்டு கூட்டுறவுத்துறையில் விவசாய அமைச்சகத்தில் இருந்து பிரித்து தனி அமைச்சகம் ஆக மாற்றப்பட்டது. கூட்டுறவுத்துறை பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து மாநில கூட்டுறவு துறை அமைச்சர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூறியுள்ளது.

 

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார். கூட்டுறவு துறைக்கு என தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவருவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் 8 லட்சம் கூட்டுறவு சங்கங்களின் சுமார் 3 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon